Stuffs within

Rap Zone :)

Here You can find urself entertained with rap music....





My songs and lyrics...

1)
  SONG      : Gethsemane...
        ARTIST     : Inigo Joseph
             SONG WRITER : Inigo Joseph
                 GENRE : Rap
                                            
                                    I.
"உன் கண்களில் கண்ணீர் , வலிந்துஒடிடும்
                                                       செந்நீர்;
      காட்டி கொடுத்தது முத்தம் , என்ன
                             செய்தாய் நீ குற்றம்..
மன நிம்மதி இல்லை , ஏனோ அலகையின்
                                              தொல்லை;
      சீடர் கண்களில் தூக்கம் , உன் 
                                        மனதுக்குள் ஏக்கம்......
உயிர் போனது தள்ளி , இந்த முப்பது 
                                                          வெள்ளி;
      சுற்றி கயவர்கள் கூடம் , ஏன் கொடுமையின் ஆட்டம்....
நீ பொறுமையில் பூத்தாய் , எங்கள் குறைகள் தான் தீர்த்தாய்;
      பலன் என்ன நீ பார்த்தாய் , இன்று சிறை சென்று சேர்ந்தாய்......
 உன் மேல்விழும் அடி, விஷ பாம்பின் கடி;
     அதில் தோன்றும் உன் வலி , உயிர் சிதைக்கும் உளி.......
இதில் கிழிந்திடும் தேகம் , கண்ணீர் பொழிந்திடும் மேகம்;
      வீரர் சிரிப்பொலி ராகம் , ஐயோ! தீராத சோகம்... 

உன்னை காட்டி கொடுத்தவனை , நண்பன் என்று வாழ்தினாய்;
     உன் மக்கள் பாவம் தீர்க்க, உன்னை நீயே தாள்தினாய்.....
வசை மொழி , சாட்டை அடி வாங்கி கொண்டே நின்றாய்;
      அசையாத மனம் கொண்டு, சுமை  தாங்கி சென்றாய் ....

                                           CHORUS
கல்வாரி பாதை எங்கும் ரெத்ததடம் தோன்ற;
    சாபமாய் நீ உரு மாறி, எங்கள் பாவம் தீர்க்க....
உன் வலக்கையில் ஆணி ஏறி,  எங்கள் வாழ்க்கை மீட்க;
   கெத்செமனே தோட்டத்திலே , உம் குரல் கேட்க....(X2)

                                                   II.
 இயற்கையும் வணங்கிடும் , இணை இல்ல இறைவன் ;
     நன்மை ஏதும் குறையாத ,உண்மை அன்பின் தலைவன் .....
நல்லோர் மனம் எங்கும் வாழும் , மதிப்புள்ள ஒருவன் ;
    நாடிநோரை தேடிச்செல்லும் , தெய்வத்தின் புதல்வன் .....
தோன்றினாய் மனிதனாய் கன்னி மரி கருவில் ;
    ஜீவித்தாய் புனிதனாய் , இஸ்ரவேலின் தெருவில்......
கற்பித்தாய் மக்களுக்கு, நற்செய்தி மலையில் ;
    நடந்தாயே சீடர்களை , தேடிச்சென்று கடலில்.......
நீர், நிலம்,நெருப்பும் , உந்தன் பெயர் கூறும்;
     நீர் செய்த அற்புதங்கள், வானின் எல்லை மீறும்....
உம் புகழ் பாக்கள் கொண்டு இன்று நிறைந்திடும் ஞாலம்;
     குரல் ஒன்றில் கட்டுப்படும் திசை, நேரம், காலம்....

கேட்கவே தோன்றும் , உந்தன் அன்பு குரலை;
     பார்த்ததும் போக்கும், உந்தன் முகம் இருளை...
இத்தகைய உயர்வை , தூக்கி ஏன் எறிந்தாய்;
    எங்களுக்காய் நீயும் ஏன் மண் மீது சரிந்தை.....

                                  CHORUS 
கல்வாரி பாதை எங்கும் ரெத்ததடம் தோன்ற;
    சாபமாய் நீ உரு மாறி, எங்கள் பாவம் தீர்க்க....
உன் வலக்கையில் ஆணி ஏறி,  எங்கள் வாழ்க்கை மீட்க;
   கெத்செமனே தோட்டத்திலே , உம் குரல் கேட்க....(X2)

                                             III.
இன்றும் கூட எங்கள் பாவம் உம்மையே தான் தாக்கும்;
    என்னுடைய தோட்டத்திலே, மீட்பு பூவும் பூக்கும்....
சிலுவையை நனைத்தது , உம் ரெத்த துளிகள் ;
     எங்கள் கண்முன் , திறந்தது வாழ்கையின் வழிகள்......
எங்கள் பாவ முகத்தை , உன் உள்ளங்கையில் வரைந்தாய்;
     ரெத்தம் தொட்டு ஆணியாலே , வரைதிட துணிந்தாய் ......
உன்னை நீயும் செதுகியே , என்னை சிலை வடித்தாய் ;
     சாவின் நஞ்சை சுவை பார்க்க ,கையில் அள்ளி குடித்தாய்...
விண்ணிற்கும் மண்ணிற்கும் நடுவிலே நின்று;
      தம்மை போல பிறரையும் நேசியுங்கள் என்று......
சொல்லாமல் சொல்லியதை சிலுவையில் காண்கிறேன் ;
      அதுவே வாழ்கையின் தொடக்கம் என்கிறேன்.....

உம்மை நானும் அறிந்தபின் பாவத்தை விட்டாச்சு;
      இன்று முதல், என்றும் வரை உமக்காய் தான் மூச்சு....
கஷ்டம் போயாச்சு, கவலை நீங்கியாச்சு;
      இறைவா உன் நாமமே , என்றும் என் வாய் பேச்சு...(X2)

                                     CHORUS
சிலுவையை உம்முடன் சேர்ந்து சுமப்பேன்;
    கல்வாரி பாதையிலே, கால்கள் பதிப்பேன்...
சாபமாய் மாறி சாவை வெல்வேன் , கெத்செமனே தோட்டத்திலே நானும் நுழைவேன்......          
                                                                                                                                                          (X2)

தந்தையே என் ஆவியை, நான் உம்மிடமே ஒப்டைகின்றேன் ......
    தந்தையே என் ஆவியை, நான் உம்மிடமே ஒப்டைகின்றேன் ...... (X2)"
                                                              
                                   hear this song...



....................................................................................................................................................................
2)


   SONG:       Kadhal ennum....
         ARTIST:    Inigo Joseph
                  SONG WRITER: Inigo Joseph
                         GENRE:     Melody




"காதல் என்னும் ஊருக்குள் , என் மனதை துளைத்தேன்!


                   எங்கேயோ துளைத்தேன் , அதை உன்னிடம் துளைத்தேன்....

என்னை தாண்டி போனாய் , அழகிய இளம் மானாய் !

                   கண்முன்னே வாராய்,உன் இதையம் தாராய்....

என் காதல் சகியே, என் வாழ்வின் ஒளியே !

                    என் பாதை வழியே, நீ வந்தே போனாய்.....

மறுமுறை நீ வருவாய் , என நான் காத்திருந்தேன்!

                     ஒருமுறை நீ வந்தே , எங்கோ மறைந்தே போனாய்....


உன்னை என்மனம் தேடுதே , உன்னை காணாமல் வாடுதே !

           உன் பிரிவினை எண்ணியே நாட்கள் நீளுதே ....

நெஞ்சம் வாடுதே ......உன்னை தேடுதே........நெஞ்சம் வாடுதே ......உன்னை
                                                                                                                                       தேடுதே......"



                        Click here to play this song( after which wait for 1 min approx. to play)
..................................................................................................................................................................
3)









     SONG: Pennae Pennae....
           ARTIST: Inigo Joseph
                SONG WRITER:Inigo Joseph
                         GENRE: R'n'B 




யாருங்க சொன்னா???? முதல் காதல்ல........தோற்றவங்களுக்கு திரும்பவும் காதல் வராதுன்னு...

 என்னக்கு வந்ததே வாழ்க்கையே முழுசா மாறிடுச்சுங்க ....அது எப்படின்னு நீங்களே கேட்டு தெரிஞ்சுகோங்க.....

 பெண்ணே பெண்ணே உன்னை நானே காதலித்தேனே. !
   
   கண்ணே கண்ணே, என்னை நானே நான் மறந்தேனே........(x2)


                                   Rap
 உனக்காய் நானும் எதுவும் செய்வேன்;
    என்னையே உனக்காய் முழுவதும் தருவேன்..
நீயும் என்னை நேசித்தால் போதும்;
    உன்னை சுவாசிப்பேன் மூச்சு காற்றாய்....

இதையம் துடிக்கும் உன்னுடன் வாழ;
      விரல்கள் தவிக்கும் உன்னுடன் சேர...
இதழ்கள் திறக்கும் காதலை சொல்ல;
      கால்களும் நடக்கும் உன் பின்னே செல்ல...

பொய்களை கூட கேட்பேன் ரசிப்பேன்;
    தூக்கத்தில் கூட உன்னையே நினைப்பேன் ...
அறைந்தால் கூட அன்பாய் அணைப்பேன்;
    அரை நொடி நேரமும் உன்னையே நினைப்பேன்......

ஒரு குடை நிழலில், ஒன்றாய் நடப்போம் ;
    இரவா பகலா , பேசி கொண்டே இருப்போம்.....
குலமென்ன மதமென்ன , மண்ணுக்குள்  புதைப்போம்;
    புது ஒரு காதல் காவியம் படைப்போம்.......

                        Here we go........ INIGO...... mu-six...k-unit-unit .......

                                             Yeah check it out............
   
என்னை அவள் பார்த்தல்.....நெஞ்சில் இன்று பூத்தால் ...மண்ணில் என்னை சாய்த்தால்....
 காதல் காலம் தொடரும்.......மனதில் பூக்கள் படரும்....இருளும் இன்று விடியும்.......yeah!

 காதல் கனவில் பறந்தேன், மிதந்தேன்..என்னை மறந்தேன்..........
     வாழ்க்கை புதியதாய் தோன்றும் காலம் இதுவென்று உணர்ந்தேன்.....
                                     
                                                  Yeah "True Love" lives......................

                                Click here to hear this song..wait 1 min approx. to load


....................................................................................................................................................................